கள்ளக்குறிச்சிதனியார் கம்பெனியில் மயங்கி விழுந்த வாலிபா் சாவு

கள்ளக்குறிச்சி தனியார் கம்பெனியில் மயங்கி விழுந்த வாலிபா் உயிரிழந்தாா்.

Update: 2023-05-20 18:45 GMT


கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இயங்கி வரும் தனியார் சோப்பு கம்பெனி உள்ளது. இங்கு மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சாமுண்டி மகன் சதீஷ் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று காலை 10.50 மணியளவில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் மொய்தீன் என்பவர் சதீஷின் தாய் லட்சுமிக்கு போன் செய்து உங்களுடைய மகன் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். எனவே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கூறினார்.

உடனடியாக அவர், அந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சதீஷ் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி சதீஷின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்