தனியார் விடுதி அறையில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை
தனியார் விடுதி அறையில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:
தேவகோட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நாகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக வந்தவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று காலை சரவணன் தங்கி இருந்த அறையின் கதவை விடுதியில் உள்ளவர்கள் தட்டியபோது கதவு திறக்காமல் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் உள்ள ஜன்னலில் வேட்டியால் சரவணன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.