தங்கத்தை இடுப்பில் கட்டி எடுத்து சென்ற நபர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை வியாசர்பாடியில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை வியாசர்பாடியில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எம்.கே.பி. நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராமிடம் போலீசார் விசாரணை மேர்ற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக அவர் மீது சந்தேகமைடந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது இடுப்பில் 2 கிலோ தங்கத்தை இடுப்பில் கட்டிய படி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லூரில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள நகை கடைக்கு எடுத்து சென்றபோது தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராமிடம் எம்கேபி நகர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.