விவசாயி உதட்டை கடித்தவர் கைது

திசையன்விளை அருகே விவசாயி உதட்டை கடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-17 21:42 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள எருமைகுளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 46), விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தில் முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், தன்னுடைய இடத்தில் எப்படி வேலி அமைக்கலாம்? என கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், பால்துரையை கன்னத்தில் அறைந்து உதட்டில் கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பால்துரை திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்