சிறுமியின் தொண்டையில் சிக்கிய காந்தம் அறுவை சிகிச்சை இன்றி அகற்றம்
தண்டராம்பட்டு அருகே சிறுமியின் தொண்டையில் சிக்கிய காந்தத்தை அறுவை சிகிச்சையின்றி டாக்டர்கள் அகற்றினர்.
தண்டராம்பட்டு அருகே சிறுமியின் தொண்டையில் சிக்கிய காந்தத்தை அறுவை சிகிச்சையின்றி டாக்டர்கள் அகற்றினர்.
காந்தத்தை விழுங்கிய சிறுமி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மொத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ், கூலித் தொழிலாளி. இவரது 3 வயதுடைய பெண் குழந்தை தனுஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக விளையாட்டு பொம்மையில் இருந்த ஸ்டார் வடிவிலான காந்தத்தை சிறுமி விழுங்கி விட்டாள்.
இதனை பார்த்த பெற்றோர் பதறியவாறு தனுஸ்ரீயை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பாராட்டு
தனுஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் மூச்சுக் குழாய் வழியாக மயக்க மருந்து செலுத்தி உணவு குழாய் வழியாக டியூப் செலுத்தி தொண்டையில் சிக்கி இருந்த காந்தத்தை அறுவை சிகிச்சை இன்றி வெளியே எடுத்தனர். சிறுமி தனஸ்ரீ நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த காந்தத்தை அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக அகற்றிய மருத்துவக் குழுவினர்களான காது, மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணர் அன்பழகன், டாக்டர்கள் கமலக்கண்ணன், அரவிந்தன், மயக்கவியல் நிபுணர் பாலமுருகன், துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், டாக்டர் மணிகண்டன் மற்றும் ஆகியோரை டீன் அரவிந்த் பாராட்டினார்.