அசுரவேகத்தில் வந்த சொகுசு பேருந்து நிழற்குடைக்குள் புகுந்து பயங்கர விபத்து - பரபரப்பு சம்பவம்

திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-10-09 13:58 GMT

விழுப்புரம்,

சென்னையில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த தனியார் சொகுசு பேருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சலவாதி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, கார் ஒன்று பேருந்திற்கு மிக அருகே வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர், கார் மீதி மோதாமல் இருக்க பேருந்தை இடதுபக்கமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த நிழற்குடையில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி நிழற்குடைக்குள் சென்றதோது, பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் நிழற்குடையில் இருந்தவர்கள் என மொத்தம் 18 பேர் படுகாயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்