பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவிக்கு போலீஸ் ஏட்டு காதல் கடிதம் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-04-01 20:01 GMT

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவிக்கு போலீஸ் ஏட்டு காதல் கடிதம் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மாணவிக்கு காதல் கடிதம்

நெல்லை ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவர் நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளிக்க சென்றனர்.

போலீசார் விசாரணை

இதை அறிந்த ஏட்டு உடனடியாக அங்கு சென்று மாணவியின் பெற்றோரிடம் சமாதானம் பேசி உள்ளார். எனினும் இதுதொடர்பாக அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர்.

அந்த புகார் மனு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்