அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி
அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி
கருங்கல்:
தர்மபுரம் மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் கருங்கல் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு லாரியில் உர மூட்டைகளை கொண்டு வந்தார். அப்போது டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால், அந்த லாரி திக்கணங்கோடு பகுதியில் வந்த போது தாறுமாறாக ஓடி ஒரு கார் மீது மோதியுள்ளது. பின்னர் மத்திகோடு பகுதியில் வந்த போது ஒரு வேன் மீதும், சாலையோரம் இருந்த சுவரிலும் மோதி நின்றது. இதுகுறித்து வேன் டிரைவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.