பஞ்சராகி நின்ற பஸ்மீது லாரி மோதி கண்டக்டர் சாவு
வாலாஜா அருகே பஞ்சராகி நின்ற பஸ்மீது லாரி மோதி கண்டக்டர் இறந்தார்.
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் பைபாஸ் சாலை மேம்பாலம் பகுதியில் தனியார் பஸ் ஒன்று காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ் டயர் பஞ்சர் ஆகியது. உடனே பஸ்சை சாலை ஓரம் நிறுத்தி டயர் மாற்றுவதற்காக பஸ்சின் அடியில் கண்டக்டர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, பஸ் மீது மோதியது. இதில் பஸ் கண்டக்டர் காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் குமார் (வயது 38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.