பழங்களை ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது; 3 பேர் படுகாயம்

மணமேல்குடி அருகே பழங்களை ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-26 18:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் தொண்டி பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்த், ஊழியர்கள் செல்வம், பரக்கத் அலி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்