காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் சுற்றி திரிந்த ஒற்றை யானை

காரப்பள்ளம் சோதனைச்சாவடி

Update: 2022-10-31 19:30 GMT

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரிகள் தினமும் சென்று வருகிறது. ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்பு கம்பி வழியாக லாரிகள் அதிக கரும்பு பாரம் ஏற்றி செல்லும் போது அதில் கரும்பு துண்டுகள் உரசி ரோட்டில் ஆங்காங்கே கீழே சிதறி கிடக்கின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு கீழே விழுந்து கிடந்த கரும்பு துண்டுகளை தின்றன. அதன்பின்னர் யானை ரோட்டில் அங்கும் இங்கும் உலா வருவதும், நடுேராட்டில் வாகனங்களை வழிமறித்து நிற்பதுமாக இருந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்