விழுப்புரம்
புதுச்சேரி மாநிலம் செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 31). இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குடும்பத்தினரை பார்ப்பதற்காக 3 நாட்கள் பரோல் அனுமதியுடன் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அய்யூர்அகரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் வரும்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் கவனக்குறைவாக வந்ததால் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமரன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.