வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2022-11-30 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் ஊட்டி அருகே கல்லக்கொரை கிராம குடியிருப்பு பகுதியில் கடந்த 28-ந் தேதி சிறுத்தை உலா வந்தது. இதை பார்த்த நாய்கள் குரைத்து கொண்டே இருந்தன. பின்னர் சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் ெபாதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, இரவு நேரங்களில் குடியிருப்பில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்