திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்

திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்

Update: 2023-03-06 20:00 GMT

மாசிமக தீர்த்தவாரியையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புனித நீராடினர்

திருவையாறில் மாசி மகத்தையொட்டி புஷ்யமண்டப காவிரி படித்துறைக்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் வந்தனர். பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி, படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பசு மாடுகளுக்கு அகத்திகீரை கொடுத்து விட்டு சென்றனர்.

தீர்த்தவாரி

தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோவிலிருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப காவிரி படித்துறையில் சூலபாணிக்கு பல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்ததவாரி முடிந்து சாமி புறப்பட்டு நான்கு வீதிவழியாக சென்று ஐயாறப்பர் கோவிலை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தையொட்டி சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து அக்னீஸ்வரர், சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்