நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-11-05 14:50 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள நரியூத்துவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 35). அவருடைய மனைவி முனியம்மாள் (35). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அழகுராஜ், ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அழகுராஜ். ராமச்சந்திரன் ஆகியோர் முனியம்மாளுக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் மனமுடைந்த முனியம்மாள், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்