ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி

ஜோலார்பேட்டை அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.

Update: 2023-04-09 17:39 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சி மூசல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் ரவி நேற்று மாலை அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். அவரை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்