வாலிபரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மனைவியை அவதூறாக பேசியதால் வாலிபரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Update: 2022-09-28 18:45 GMT

கோவை

மனைவியை அவதூறாக பேசியதால் வாலிபரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செங்கல் சூளை

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 25). அதே செங்கல் சூளையில் வேலை பார்த்தவர் வெள்ளியங்கிரி (53). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. வெள்ளியங்கிரியின் மனைவி குறித்து ஜெயக்குமார் அவதூறாக பேசி வந்துள்ளார். இதனால் அவர் மீது வெள்ளியங்கிரி ஆத்திரத்தில் இருந்தார்.

அடித்துக்கொலை

கடந்த 1.3.2021 அன்று இரவு 10.30 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயக்குமாரை மரக்கட்டையால் தலையில் வெள்ளியங்கிரி அடித்துள்ளார். மேலும் அவரது வாயிலும் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் கோவை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வெள்ளியங்கிரிக்கு ஆயுள்எதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்