பெடல் இல்லாத சைக்கிளில் வந்த வடமாநில தொழிலாளி

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பெடல் இல்லாத சைக்கிளில் வந்த வடமாநில தொழிலாளி சாதனை படைத்தார்.

Update: 2023-05-25 18:45 GMT

கன்னியாகுமரி:

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பெடல் இல்லாத சைக்கிளில் வந்த வடமாநில தொழிலாளி சாதனை படைத்தார்.

தொழிலாளி

மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ராம் கண்டேகர் (வயது 50). அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பெடல் இல்லாத சைக்கிளில் செல்வதன் மூலம் உலக சாதனை பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இருந்து பெடல் இல்லாத சைக்கிளில் ஒற்றை காலால் தரையை உந்தியபடி தனது உலக சாதனை பயணத்தை தொடங்கினார்.

4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர்

அங்கிருந்து இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக இந்த மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தார். பின்னர் அவர் ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் தனது உலக சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

இவர் 94 நாட்களில் மொத்தம் 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்து சாதனை புரிந்துள்ளார். தொழிலாளி ராஜேஷ் ராம் கண்டேகர் இதற்கு முன்பு 28 நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணம் செய்துள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்