பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தொழிலாளி பலி

நெல்லை அருகே பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் ேமாட்டார் சைக்கிளுடன் விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-06-10 20:22 GMT

இட்டமொழி:

நெல்லை அருகே உள்ள கூந்தன்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூந்தன்குளத்தில் இருந்து சிறிது தொலைவில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அதில் குறைவான தண்ணீரும் கிடந்தது. மேலும் பள்ளத்தையொட்டி சில தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், வாகனங்கள் சாலையின் அருகில் உள்ள மணல் பரப்பில் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று அதிகாலையில் அந்த வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அப்போது, அந்த பள்ளத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து மூலைக்கரைப்பட்டி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்தவர் குறித்து தகவல்கள் வெளியாகின. அதாவது, மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் முருகன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் மணிராஜ் (வயது 40). கிணறு வெட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ேமாட்டார் சைக்கிளில் மூலைக்கரைப்பட்டிக்கு சென்று வீட்டிற்கு ேதவையான பொருட்கள் வாங்கினார். இரவு 11 மணியளவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

கூந்தன்குளம் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக மணிராஜ் மோட்டார் சைக்கிளுடன் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்தார். இதில் விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் இரவு நேரம் என்பதால் யாரும் இதை கவனிக்கவில்லை. எனினும் மணிராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் இறந்த மணிராஜூக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கலையரசன், வீரியபெருமாள், அரவிந்த் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். நெல்லை அருகே பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் ேமாட்டார் சைக்கிளுடன் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்