வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறி; 6 பேர் கைது

நெல்லையில் வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-30 20:59 GMT

நெல்லை டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை டவுன் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று ஆனந்தராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நெல்லை டவுன் எண்ணாயிரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த பேச்சிவேல் (வயது 26), பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவைச் சேர்ந்த ராஜா (38), தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்த ராமையா (27), பேட்டை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த தர்மன் (45), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த சலீம் (43), ஷாஜகான் (40) ஆகிய 6 பேரும் சேர்ந்து ஆனந்தராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்