கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

திமிரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 17:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீசார் காலை தாமரைப்பாக்கம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 51) என்பதும், திமிரியைச் சேர்ந்த மனோகர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்