கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-17 18:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பருடன் திருவிகா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்ேபாது அங்கு அந்த வழியாக வந்த வெங்கமேட்டை சேர்ந்த வினோத் (வயது 38) என்பவர் ராமச்சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்