சேலத்தில்ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை

சேலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது.

Update: 2023-01-20 20:13 GMT

சேலம்

பனமரத்துப்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் சின்னகடை வீதி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மார்க்கெட்டுக்கு விவசாயிகள் தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை ஆகின. இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவானது. இதனால் நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை ஆனது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது பனி காலத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக இருக்கும். தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகம் பனி ஏற்படுகிறது. இதனால் விளைச்சல் குறைவாகி விலை அதிகமாகி உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்