தென்னை மரம் விழுந்து நகைக்கடை தொழிலாளி பலி

தென்னை மரம் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-08 16:08 GMT

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிசாமி (வயது 38), நகைக்கடை தொழிலாளி. இவர், கிரிவலப்பாதையில் அவர் வேலை பார்க்கும் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டை தொழிலாளர்களை அழைத்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தொழிலாளர்கள் தென்னை மரத்தை வெட்டினர். அந்த சமயத்தில் எதிர்பாராமல் தென்னை மரம் முறிந்து முனிசாமி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மரத்தை வெட்டிய தொழிலாளர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த முனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்