அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக பிரம்மாண்டமாக தயாராகும் பந்தல்
சென்னை வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
சென்னை,
கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த முறை நடைபெற்ற திருமண மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், சுமார் மூவாயிரம் பேர் கலந்துகொள்ளும் விதமாக மண்டபத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.