வீட்டை உடைத்து 14 பவுன் நகை- பணம் கொள்ளை

பாளையங்கோட்டையில் வீட்டை உடைத்து 14 பவுன் நகை- பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.

Update: 2023-04-28 19:35 GMT

பாளையங்கோட்டை சாந்திநகர் 27-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 31). இவர் டக்கரம்மாள்புரத்தில் உள்ள கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய உறவினர் வீடு கே.டி.சி. நகரில் உள்ளது. அங்கு தனது மனைவியுடன் சில நாட்களுக்கு முன்பு சென்ற அவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2½ லட்சத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்