வீடு கட்டி தர வேண்டும்
வீடு கட்டி தர வேண்டும் என திருநங்கை கோரிக்கை விடுத்து உள்ளார்.
கோத்தகிரி,
குன்னூர் அருகே பெட்டட்டி அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் சந்திரா. திருநங்கை. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கூலித்தொழிலாளியான அவருக்கு நாள் ஒன்றுக்கு சம்பளமாக ரூ.350 மட்டுமே கிடைத்து வருகிறது. அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். எனவே, திருநங்கையான தனக்கு அரசு சார்பில் வீடு கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரா கோரிக்கை விடுத்து உள்ளார்.