வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்
வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கத்தை சேர்ந்த பாத்திமா தலைமையிலான திருநங்கைகள் நேற்று முன்தினம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கோட்லாம்பாக்கம் பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனைப் பட்டா கேட்டு கலெக்டர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து விட்டோம். ஆனால் இது வரைஎவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் திருநங்கைகள் என்பதால் எங்களை குடும்பத்தாரும், சக உறவினர்களும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். தற்போது எவ்வித வாழ்வாதாரமும் இன்றி தவித்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.