வால்பாறை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ-ரூ.3 லட்சம், பொருட்கள் நாசம்

வால்பாறை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீயால் ரூ.3 லட்சம் மற்றும் பொருட்கள் நாசம் ஆனது.

Update: 2023-06-01 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீயால் ரூ.3 லட்சம் மற்றும் பொருட்கள் நாசம் ஆனது.

வீட்டில் தீ

வால்பாைற அருகே உள்ள மளுக்கப்பாறை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஹூசைன். இவர் வீட்டில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எாிந்தது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி மளுக்கப்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மளுக்கப்பாறை எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை பொதுமக்கள் அணைத்து விட்டனர். வால்பாறையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு வருவதற்குள் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

ரூ.3 லட்சம் ரொக்கம் எரிந்தது

மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் எரிந்து சாம்பலானது. தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்தில் சேதமான வீட்டை பார்வையிட்டனர்.

சோலையாறு அணை, சேக்கல்முடி, பன்னிமேடு, உருளிக்கல் மற்றும் சோலையாறு அணைக்கு அருகில் உள்ள கேரள மாநிலம் மளுக்கப்பாறை ஆகிய இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வால்பாறையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து சேருவதற்குள் பொருட்கள் சேதமடைந்து விடுகிறது என்று பொதுமக்கள் மற்றும் கூலித்்தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்