பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டி அருந்ததியர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது வீட்டில் விறகு கட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அதில் திடீரென்று தீப்பிடித்தது.
அதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மேலும் அருகில் உள்ள மகாராஜன் என்பவரது ஓட்டு வீட்டில் பின்புறம் சிறிய அளவில் பனங்கட்டைகளில் ஏற்பட்ட தீயையும் அணைத்தனர். உரிய நேரத்தில் தீயணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.