குன்னூரில் பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம்... பீதியில் உறைந்த பொதுமக்கள்

பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

Update: 2023-04-03 10:54 GMT

குன்னூர்,

குன்னூரில் பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர். உணவு, தண்ணீருக்காக அவ்வப்போது சாலையில் உலா வரும் யானைக்கூட்டத்தால் போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குன்னூர் மலைபாதையில் பர்லியார் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் இரவில் காட்டுயானைகள் முகாமிட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். சற்று நேரம் அங்கு உலாவிய காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

 

Tags:    

மேலும் செய்திகள்