மானை வேட்டையாடிய செந்நாய் கூட்டம்

முதுமலையில் செந்நாய் கூட்டம் மானை வேட்டையாடியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-11-26 18:45 GMT

கூடலூர்

முதுமலையில் செந்நாய் கூட்டம் மானை வேட்டையாடியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாகன சவாரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், மான்கள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் என ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வனத்துறை வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று வனம் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் புலி, சிறுத்தைப்புலிகளை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் வாகன சவாரி செல்வது வழக்கம். ஆனால் பெரும்பாலான சமயத்தில் வாகன சவாரியின்போது எந்த வனவிலங்குகளும் சுற்றுலா பயணிகளின் கண்ணில் தென்படுவதில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையும் உள்ளது.

செந்நாய் கூட்டம்

இந்த நிலையில் நேற்று காலையில் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு வனத்துறை வாகனம் முதுமலை சர்க்கிள் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. சுமார் 1½ கிேலா மீட்டர் தூரம் சென்ற போது சாலையோரம் செந்நாய்கள் கூட்டமாக ஓரிடத்தில் நிற்பதை கண்டு சுற்றுலா பயணிகள் சந்தோஷம் அடைந்தனர். உடனடியாக வனத்துறை வாகனத்தை நிறுத்த வலியுறுத்தினர்.

அப்போது மான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை செந்நாய்கள் கடித்து தின்பதை கண்டனர். மேலும் புதருக்குள் பதுங்கியிருந்த சில செந்நாய்கள் மான் உடலை தின்பதற்காக ஓடி வந்தது. இந்த வீடியோ காட்சியை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்