விளை நிலத்தில் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ந்த விவசாயி

75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு விவசாயி ஒருவர் தன் விவசாய நிலத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

Update: 2022-08-14 06:21 GMT

புதுச்சேரி:

மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின 75 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வீடு தோறும் கல்வி நிறுவனங்கள் கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

இதனை உள்ளாட்சித் துறை சமூக நலத்துறை அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை வீடு தூரம் தேசிய கொடியை ஏற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தேசியக் கொடியை வழங்கும் பணி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேச பக்தி கொண்ட பாகூர் விவசாயி ரவி (வயது 52), தனது நெல் விவசாய நிலத்தில் கம்பத்தில் தேசியக் கொடியை கட்டி பட்டொலி வீசி பறக்கச் செய்து தனது தேசபக்தியை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வியப்பில் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்