விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிபட்டி செப்பேரிதோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் திருமேனி (வயது26). பி.எஸ்சி. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். திருமேனி கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் தனது அக்கா வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு சிகிச்சை பெற்று வந்த திருமேனி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை ரவிச்சந்திரன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருமேனி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.