நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பஸ்; கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்

கொடைரோடு அருகே நடுரோட்டில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-18 19:36 GMT

திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வில்லாணியை சேர்ந்த குணசேகரன் (வயது 44) ஓட்டினார். கண்டக்டராக சக்கரைப்பட்டியை சேர்ந்த அருண் (35) பணிபுரிந்தார்.

திண்டுக்கல்-மதுரை நான்குவழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடியை அடுத்த சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் நள்ளிரவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த அருப்புகோட்டையை சேர்ந்த ராஜாராம் (40), அவருடைய மகன் விபுசன் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்