பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-03 16:41 GMT

திண்டுக்கல் அருகே உள்ள உத்தனம்பட்டி ராமச்சந்திரா காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அவருடைய மனைவி பாண்டிச்செல்வி (வயது 37). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், திண்டுக்கல்லில் உள்ள வங்கிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து, திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். உத்தனம்பட்டி பிரிவு அருகே மோட்டார்சைக்கிள் வந்தது.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். இதில், பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் பாண்டிச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாண்டிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்