தக்கலை:
குமாரபுரம் அருகே உள்ள ஈத்தவிளை, தென்பொற்றைவிளையை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி கிறிஸ்டினா (வயது60). இவர் சம்பவத்தன்று மதியம் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கிறிஸ்டினாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் 'திருடன்... திருடன்...' என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து கிறிஸ்டினா கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.