ஒரு ஆடு ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை
கே.வி.குப்பம் சந்தையில் ஒரு ஆடு ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது.
கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் இந்த வாரம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கருப்பு நிற ஆடுகள், பல நிற ஆடுகள் என்று சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. வரும் 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு ஆடுகள் வாங்க வழக்கத்தைவிட கூடுதலாக வந்திருந்தனர். விற்பனைக்கு வந்த ஆடுகளில் ஒன்றின் விலை ரூ.10 ஆயிரம் முதல் விற்பனையானது. அதில் ஒரு ஆடு ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
மொத்தம் ரூ.2 லட்சம் வரை வியாபாரம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களில் நடைபெற்ற விற்பனையைவிட இது அதிகம். மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் மேலும் கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆகும் என்றும், கூடுதல் எண்ணிக்கையில் ஆடுகள் சந்தைக்கு வரும் என்றும், எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.