மாடியில் இருந்து துள்ளிகுதித்ததில் மின்வயர்களில் சிக்கிய ஆடு

திண்டுக்கல்லில் குர்பானிக்கு கொண்டு சென்றபோது மாடியில் இருந்து துள்ளிகுதித்த ஆடு மின்கம்பியில் சிக்கியது.

Update: 2023-06-29 19:00 GMT

குர்பானி

பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கொண்டாடினர். இந்த பக்ரீத் பண்டிகையின் போது முஸ்லிம்கள் தங்களுடைய வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். அவ்வாறு குர்பானி கொடுக்கப்படும் ஆட்டின் இறைச்சியை 3 பங்கிட்டு ஒரு பங்கை தங்களுக்கு வைத்து கொண்டு 2-வது பங்கை உறவினர்களுக்கும், 3-வது பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பார்கள்.

இது பக்ரீத் பண்டிகையின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. அந்தவகையில் திண்டுக்கல்லில் நேற்று ஏராளமான முஸ்லிம்கள் குர்பானி கொடுத்தனர். அதன்படி திண்டுக்கல்லில் ஒரு குடும்பத்தினர் குர்பானி கொடுப்பதற்காக ஆடு வளர்த்து வந்தனர். மாடி வீட்டில் வசித்து வரும் அவர்கள், நேற்று குர்பானி கொடுக்க தங்களுடைய ஆட்டை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றனர்.

மின்வயர்களில் சிக்கிய ஆடு

அப்போது மிரண்டு காணப்பட்ட அந்த ஆடு திடீரென மாடியில் இருந்து துள்ளி குதித்தது. அதில் வீட்டின் அருகே சென்ற வீட்டு மின்இணைப்புகளுக்கான மின்வயர்களில் ஆடு சிக்கி கொண்டது. மேலும் வயர்களில் இருந்து மீள்வதற்கு போராடியது. இதையடுத்து மின்சாரம் தடைபட்டதால் ஆடு உயிர் தப்பியது.

இதற்கிடையே மின்வயர்களில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ஆட்டை, உரிமையாளர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மீட்டனர். பின்னர் லேசாக காயமடைந்திருந்த ஆட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேநேரம் மின்வயர்களில் சிக்கி தொங்கிய ஆட்டை ஏராளமானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்