மின் பயனீட்டாளர்களுக்கு பரிசு

சங்கரன்கோவிலில் மின் பயனீட்டாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-08-12 15:21 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்ப்புற மின்வாரியம் சார்பில் ஆடித்தபசு திருநாளன்று மின் பயனீட்டாளர்கள் மின் இணைப்பு எண்ணோடு செல்போன் எண்ணை இணைக்குமாறும், அவ்வாறு இணைப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்து இருந்தது.

அதன்படி ஏராளமானவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும், மின் இணைப்பு எண்ணையும் ஒரு சீட்டில் எழுதி போட்டனர். இதில் முதல் பரிசாக சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்ணிற்கு 50 கிராம் வெள்ளி விளக்கும், இரண்டாம் பரிசாக சங்கரன்கோவிலை சேர்ந்த சிவசுப்பிரமணியனுக்கு இஸ்திரி பெட்டியும், முப்புடாதி என்பவருக்கு மூன்றாம் பரிசாக இஸ்திரி பெட்டியும், மேலும் 20 பேருக்கு சில்வர் பானை உள்ளிட்ட பரிசுகளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதனை மின்வாரிய உதவி பொறியாளர் கருப்பசாமி, மின் பயனீட்டாளர்களுக்கு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்