தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

வடக்கநந்தலில் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-15 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வடக்கநந்தலில் நடைபெற்றது. இதற்கு நகர அவைத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் தண்டபாணி, துணை செயலாளர்கள் வெங்கடேசன், தனபால், சந்திராசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜெயவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான உதயசூரியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 19-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நகர, கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்