வீட்டில் கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியதால் பரபரப்பு
வீட்டில் கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் முத்துக்கங்கானி தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி லட்சுமி. இவர் வீட்டின் சமையல் அறையில் சமைத்தபோது கியாஸ் கசிவு காரணமாக சிலிண்டரின் வால்வு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அலறியடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த குடும்பத்தினர், இது பற்றி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், நீரில் நனைத்த போர்வை, சாக்குகளை கொண்டு வால்வு பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.