காட்டுப்பன்றி தாக்கி தோட்ட தொழிலாளி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-04 18:45 GMT

கூடலூர்

கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அள்ளூர்வயல் தனியார் எஸ்டேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் சிக்மாயாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் நேற்று வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென சுந்தரமூர்த்தியை தாக்கியது. இதில் அவருக்கு இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வனத்துறையினரும், பொதுமக்களும் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்