மனவேதனையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

மனவேதனையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2023-04-22 18:45 GMT

சாயல்குடி

சாயல்குடி அருகே கன்னிகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). முடி திருத்தும் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருமே காதலித்து திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்