கஞ்சா விருந்து கொடுக்க மறுத்த நண்பருக்கு அடி உதை; 3 பேர் கைது
திசையன்விளை அருகே கஞ்சா விருந்து கொடுக்க மறுத்த நண்பரை அடித்து உதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை நெடுவிளை தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 20). இவரது பிறந்தநாள் விழாவிற்கு அவரது நண்பர்களான திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் விக்னேஷ் (20), தேவேந்திரன் மகன் யோகராஜன் (19), வாசகர் சாலை தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் செல்வின் (20) ஆகியோர் கஞ்சா விருந்து வைக்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு மூர்த்தி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அத்திரம் அடைந்த நண்பர்கள் மூவரும் மூர்த்தியை அடித்து உதைத்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தாயார் பிரேமா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், யோகராஜன், செல்வின் ஆகிய மூவரையும் கைது செய்தார்