விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Update: 2022-09-21 18:45 GMT

மன்னார்குடி ஒன்றியம் மகாதேவபட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலு.அறிவழகன், துணைத்தலைவர் மோகன்தாஸ், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.என்.பாரதிமோகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி மாரியம்மாள், உறுப்பினர் ரமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் ஆசிரியை அபிராமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்