மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; விவசாயி பலி

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள், மொபட் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2023-07-16 21:00 GMT

சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 49). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மொபட்டில் கொசவபட்டி பஸ் நிறுத்தம் அருகே திண்டுக்கல்-நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேம்பார்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 31) என்பவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தார்.

அப்போது பாண்டியின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அருளானந்தத்தின் மொபட் மீது மோதியது. இதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த அருளானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்