காளை மாட்டிற்கு கோவில் கட்டி வழிபடும் விவசாயி

காளை மாட்டிற்கு கோவில் கட்டி வழிபடும் விவசாயி

Update: 2022-09-10 11:25 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சோமசுந்தரம். இவர் ஒரு காளையை வாங்கி அதற்கு கருப்பன் என்ற பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார். 18 ஆண்டுகளாக வளர்ந்து வந்த காளை வயது முதிர்வு காரணமாக 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி செத்து விட்டது. அந்த காளையின் உடலை தனது சொந்த இடத்திலேயே அடக்கம் செய்தார். பின்னர் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி காளை அடக்கம் செய்த இடத்தில் காளையின், உருவப் படத்தை வைத்து குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதேபோல் நேற்று 5-வது ஆண்டையொட்டி காளையின் படத்தை வைத்து குடும்பத்தோடு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். தற்போது இறந்துபோன காளை மாட்டுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2023 ஆண்டு நினைவு தினத்திற்குள் கோவில் கட்டுமான பணி கட்டி முடிக்கப்பட்டு விடும் என விவசாயி சோமசுந்தரம் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்