மேம்பாலம் கட்ட வேண்டும்
வாழியூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து வாழியூர் ஊராட்சியில் கிராமமக்கள் சார்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மேம்பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே வாழியூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைபாலத்தில் உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.