மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

போலீசார் பொய்வழக்கு போடுவதாக கூறி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-13 18:45 GMT

போலீசார் பொய்வழக்கு போடுவதாக கூறி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன் வியாபாரி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

அய்யப்பன், கடந்த ஆண்டு குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோபித்து கொண்டு சென்று விட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என பாலையூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

பொய் வழக்கு

இந்த வழக்கு தொடர்பாக அவர் அடிக்கடி போலீஸ் நிலையம் சென்றுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்பனை செய்ததாக பாலையூர் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மீன்வியாபாரம் செய்த தன் மீது பாலையூர் போலீசார் பொய்வழக்கு போட்டதோடு தொடர்ந்து அதுபோல் வழக்கு பதிவிட்டு என்னை சிரமப்படுத்தி தனது வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அய்யப்பன் மனு கொடுத்திருந்தார்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் நேற்று அய்யப்பன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்ஜீவ்குமார், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அய்யப்பனை தடுத்து நிறுத்தி, மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பரபரப்பு

போலீசார் பொய் வழக்குகள் போடுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மீ்ன்விாயபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்